/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை காலத்தில் பயிர் பாதுகாப்பு
/
மழை காலத்தில் பயிர் பாதுகாப்பு
ADDED : நவ 03, 2024 10:37 PM
கிணத்துக்கடவு; காய்கறிகள் மற்றும் கொடி வகை பயிர்களில் மழை காலத்தில் பூ உதிர்வதை தவிர்க்க, இயற்கை விவசாயி மாரிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் தென்னைக்கு அடுத்த படியாக, காய்கறிகள் மற்றும் கொடி வகை பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை துவங்கும் தருவாயில் இருப்பதால், பயிர்களில் இருக்கும் பூ மழைக்கு விரைவாக உதிர்கின்றன. இதை கட்டுப்படுத்த இயற்கை விவசாயி மாரிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதில், புளித்த தேங்காய் கரைசல், புளித்த மோர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து, காய்கறி மற்றும் கொடி வகை பயிர்களின் இலைகள் மேல் தெளித்து வந்தால், பூ உதிர்வதை தடுக்க முடியும். மேலும், காய்கறி மகசூல் அதிகரிக்கும், என, இயற்கை விவசாயி மாரிமுத்து தெரிவித்தார்.