/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர் பாதுகாப்பு வயல் விழா; தக்காளியில் பாதிப்பு தடுக்க வழி
/
பயிர் பாதுகாப்பு வயல் விழா; தக்காளியில் பாதிப்பு தடுக்க வழி
பயிர் பாதுகாப்பு வயல் விழா; தக்காளியில் பாதிப்பு தடுக்க வழி
பயிர் பாதுகாப்பு வயல் விழா; தக்காளியில் பாதிப்பு தடுக்க வழி
ADDED : ஜன 29, 2025 11:15 PM
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் தைவான், உலக காய்கறி மையம் இணைந்து, தாவர நல முனைப்பு நிதி உதவியுடன், தக்காளி மற்றும் அவரை பயிர்களில், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தக்காளியை நோய் எதிர்ப்பு திறனுடன் உடைய, கத்திரி ரகத்தின் வேர்ப்பகுதியுடன் இணைத்து ஒட்டுக்கட்டுவதன் வாயிலாக, மழை காலங்களில் தக்காளியை தாக்கும் பூஞ்சாண மற்றும் பாக்டீரியல் நோய்களிலிருந்து பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை, உலகக் காய்கறிகள் மையம் கண்டறிந்துள்ளது.
இத்தொழில்நுட்பம் குறித்த ஆய்வுத்திடல், மதுக்கரை மார்க்கெட் அடுத்துள்ள சட்டக்கல்புதுார் கிராமத்தில், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வுத்திடல் பின்பற்றிய தொழில்நுட்பங்களை, மற்ற விவசாயிகளுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வகையில், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழா, ஆய்வுத்திடலில் நடந்தது. வேளாண் பல்கலைக் கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி, நோயியல் துறை பேராசிரியர் அங்கப்பன், பூச்சியியல் துறை பேராசிரியர் முருகன், பல்கலைக் கழக பயிற்சி மைய பேராசிரியர் ஆனந்தராஜா, தாவர உயிர்த் தொழில் நுட்பவியல் விஞ்ஞானி மணிகண்ட பூபதி உட்பட பலர் பேசினர்.
திட்டத்தை செயல்படுத்திய விவசாயி நாகரத்தினசாமி, தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்றனர்.

