/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாஜி அமைச்சர் மீதான வழக்கில் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
/
மாஜி அமைச்சர் மீதான வழக்கில் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
மாஜி அமைச்சர் மீதான வழக்கில் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
மாஜி அமைச்சர் மீதான வழக்கில் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
ADDED : அக் 07, 2025 11:21 PM
கோவை; சிங்காநல்லுாரில் வசித்து வருபவர் பொங்கலுார் பழனிசாமி; 2006-2011 தி.மு.க., ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக, 2011, நவ. 28ல் வழக்கு பதியப்பட்டு, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. பின்னர் சார்பு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
கடந்த ஜூலையில் மீண்டும் கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. வழக்கின் புலன் விசாரணை அதிகாரி சண்முகபிரியாவிடம், எதிர் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்ய, கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சண்முகபிரியா கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம், எதிர்தரப்பு சார்பில் ஆஜரான, சென்னை வக்கீல் ஜோதி குறுக்கு விசாரணை செய்தார். விசாரணையை அக். 27க்கு ஒத்திவைத்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.