sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குண்டும் குழியுமாக இருக்கின்றன குறுக்கு வீதிகள்; நிதி ஒதுக்க மன்றத்தில் கவுன்சிலர்கள் முறையீடு

/

குண்டும் குழியுமாக இருக்கின்றன குறுக்கு வீதிகள்; நிதி ஒதுக்க மன்றத்தில் கவுன்சிலர்கள் முறையீடு

குண்டும் குழியுமாக இருக்கின்றன குறுக்கு வீதிகள்; நிதி ஒதுக்க மன்றத்தில் கவுன்சிலர்கள் முறையீடு

குண்டும் குழியுமாக இருக்கின்றன குறுக்கு வீதிகள்; நிதி ஒதுக்க மன்றத்தில் கவுன்சிலர்கள் முறையீடு


ADDED : அக் 14, 2025 09:57 PM

Google News

ADDED : அக் 14, 2025 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. 103 தீர்மானங்கள், 'ஆல்-பாஸ்' முறையில் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின், கவுன்சிலர்கள் பேசியதாவது:

கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி:

கிழக்கு மண்டலத்தில், உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இப்போது மலுமிச்சம்பட்டியில் இடம் தேர்வாகி உள்ளது. 55வது வார்டில் 4 ஏக்கரில் மூங்கில் பூங்கா அமைப்பது ஏன், அதனால் என்ன பிரயோஜனம்.

எங்களுடைய கருத்துக்கு மரியாதை இல்லையா. அதிகாரிகளே தன்னிச்சையாக முடிவெடுப்பது என்றால், எங்களிடம் எதற்கு கருத்து கேட்கிறீர்கள். கண்துடைப்புக்காக கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.

கல்வி மற்றும் பூங்காக்கள் குழு தலைவர் மாலதி:

மூங்கில் பூங்கா மற்றும் ஸ்டேடியம் அமைப்பது தொடர்பான தீர்மானம், நிலைக்குழு கூட்டத்துக்கு வராதது ஏன்?

சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன்:

சூயஸ் திட்டத்தில் 85 சதவீத பணிகள் முடிந்து விட்டன. ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. தோண்டிய ரோடுகளில், 'வெட்மிக்ஸ்' போட வேண்டும். மேயர் நிதியில் 25 லட்சம், கமிஷனர் நிதியில் 25 லட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டும். குறுக்கு வீதிகளில் சிமென்ட் சாலைகள் போடுவதற்கு, 30 லட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டும்.

நகரமைப்பு குழு தலைவர் சந்தோஷ்:

73வது வார்டு பொன்னையராஜபுரத்தில் ரூ.69 லட்சத்தில் மூன்று அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. எனது பரிந்துரையில் மாநகராட்சி பொது நிதியில் ரூ.30 லட்சம் செலவிடப்பட்டது. எம்.எல்.ஏ., பெயர் குறிப்பிட்டு திறக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி சார்பில் செய்த வேலைகளுக்கு கல்வெட்டு வைத்து, மேயரும், கமிஷனரும் திறப்பு விழா நடத்தி, இனிப்பு வழங்க வேண்டும். சலீவன் வீதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து, அ.தி.மு.க., அலுவலகம் செயல்படுகிறது. அதை அகற்ற வேண்டும்.

ம.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் சித்ரா:

மாநகராட்சி பள்ளிகளில் பெண்கள் கழிப்பறை சுத்தமாக இல்லை. துாய்மை பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். குடிசையில் வசிக்கும் துாய்மை பணியாளர்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும். பி.எப்., திட்டச்சாலை பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

அம்சவேணி, 51வது வார்டு:

குப்பை அள்ளுவதற்கு இரண்டு வாகனம் வருகிறது. கூடுதலாக ஒதுக்கிய வண்டி இப்போது வருவதில்லை. டிரான்ஸ்பார்மர் அருகே திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. நான்கு அல்லது ஐந்து இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

ராஜலட்சுமி, 77வது வார்டு:

பாதாள சாக்கடையில் அடைப்பு நீக்க, 'சூப்பர் சக்கர்' வாகனம் அனுப்ப வேண்டும். ஒரு வாரமாக தெருவிளக்குகள் எரிவதில்லை. சொக்கம்புதுார் ரோடு படுமோசமாக இருக்கிறது; பேட்ச் ஒர்க் போட்டால் தாங்காது.

புதிதாகவே ரோடு போட வேண்டும். ரங்கசாமி காலனி தெருநாய் பிரச்னைக்கு மக்கள் அனுப்பிய வீடியோவை பகிர்ந்தேன். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என மக்கள் கேட்கிறார்கள்.

இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.

கரூர் சம்பவம்; மன்றத்தில் இரங்கல்

கரூரில் த.வெ.க., கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவிக்க வேண்டுமென மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரினர். அதையேற்று, மேயர், கமிஷனர் தலைமையில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் அனைவரும் எழுந்து நின்று, 2 நிமிடம் இரங்கல் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us