sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பி.எஸ்.ஜி. கல்லுாரி சிறப்பு விருதுக்கு தேர்வு

/

பி.எஸ்.ஜி. கல்லுாரி சிறப்பு விருதுக்கு தேர்வு

பி.எஸ்.ஜி. கல்லுாரி சிறப்பு விருதுக்கு தேர்வு

பி.எஸ்.ஜி. கல்லுாரி சிறப்பு விருதுக்கு தேர்வு


ADDED : அக் 14, 2025 09:57 PM

Google News

ADDED : அக் 14, 2025 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரியின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மையம், மாநில அளவில், சிறந்த 15 தொழில்முனைவோர் வளர்ப்பு மையங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது:

கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்த, தமிழ்நாடு குளோபல் ஸ்டார்ட்அப் சம்மிட் 2025 நிகழ்வில், இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. மாநில திட்ட ஆணைய துணை தலைவர் ஜெயரஞ்சன், ஸ்டாட் அப் டி.என். இயக்குனர் சிவராஜ் ராமநாதன் ஆகியோர் இவ்விருதை வழங்கினர்; பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி புத்தாக்க மைய குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

இந்த அங்கீகாரத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசு எம்.எஸ்.எம்.இ. துறையின் ஸ்டார்ட்அப் டி.என் சார்பில், கல்லுாரிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

850க்கும் மேற்பட்ட புதுமை மற்றும் தொழில்முனைவோர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பல மாணவர் ஸ்டார்ட்அப்கள் எம்.எஸ்.எம்.இ. மற்றும் டி.பி.ஐ.ஐ.டி. துறைகளில், பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us