/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர் விடுமுறை; அருவியில் கூட்டம்
/
தொடர் விடுமுறை; அருவியில் கூட்டம்
ADDED : செப் 07, 2025 09:20 PM

வால்பாறை; தொடர் விடுமுறையின் காரணமாக அதிரப்பள்ளி அருவியை காண சுற்றுலா பயணியர் அதிக அளவில் திரண்டனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களாக கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையினால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது விடுமுறையை கொண்டாட அதிரப்பள்ளி அருவிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் திரண்டுள்ளனர். இதனால் வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது,'கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணியர் வருகை அதிரப்பள்ளி அருவிக்கு அதிகரித்துள்ளது.
மழைப்பொழிவு சற்று குறைந்தாலும், அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதி இல்லை. அருவியை சுற்றுலா பயணியர் அருகில் நின்றபடி கண்டு ரசிக்கின்றனர்' என்றனர்.