தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அலைமோதிய பயணிகள் கூட்டம்

அலைமோதிய பயணிகள் கூட்டம்

அலைமோதிய பயணிகள் கூட்டம்


ADDED : ஆக 31, 2025 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஊட்டிக்கு 35 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.

வார விடுமுறையையொட்டி ஊட்டிக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊட்டிக்கு கூடுதலாக 35 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகம் மேட்டுப்பாளையம் கிளை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த வெள்ளி, சனி மற்றும் நேற்று 35 சிறப்பு பஸ்கள் கூடுதலாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டன. பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் தேவைப்பட்டால், இயக்கப்படும், என்றார்.------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us