ADDED : மார் 09, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
போத்தனூர்: மகாலிங்கபுரத்திலுள்ள, அதிவிரைவு படை 105வது பட்டாலியன் முகாமில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்.), 87வது துவக்க தினம் முன்னிட்டு, மருத்துவம் மற்றும் ரத்த தான முகாம் நடந்தது. இதில், பொது மருத்துவ பரிசோதனை, டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரால் நடத்தப்பட்டது.
முகாமை சேர்ந்த, 61 பேர் ரத்த தானம் செய்தனர். 105வது பட் டாலியன் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தார் பங்கேற்றனர்.
