/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு பயிற்சி
/
காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு பயிற்சி
காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு பயிற்சி
காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 30, 2025 09:02 PM

பெ.நா.பாளையம்; காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க, சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுவதாக, கோவை சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லூரி முதன்மை பயிற்சியாளர் ஆன்டனி ஜென்சன் கூறினார்.
கோவை அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம் சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லூரியில், 48 வாரங்களாக பல்வேறு பயிற்சிகள் பெற்ற, 12 பெண்கள் உட்பட, 366 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பயிற்சி கல்லூரி முதல்வர் லாங்சின்குப் தலைமை வகித்து, சப்-இன்ஸ்பெக்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லூரியின் முதன்மை பயிற்சியாளர் ஆன்டனி ஜென்சன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த, 48 வாரங்களாக நடந்த பயிற்சி வகுப்புகளில், பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நக்சல்களை ஒடுக்கவும், காஷ்மீரில் தீவிரவாதத்தை தடுக்கவும், அங்குள்ள இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் செயல்படவும், சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
பயிற்சியின்போது தங்கள் திறன்களை வெளிப்படுத்திய எஸ்.ஐ.க்களுக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வளாக பயிற்சி மட்டுமல்லாமல், அடர்ந்த வனங்களுக்குள் தனியாக வசிப்பது, எதிரிகளை அடையாளம் காண திட்டமிடுவது, செயல்படுத்துவது, வெற்றி கொள்வது தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
சி.ஆர்.பி.எப்., படையில் பெண்களும் இணைந்து பணியாற்ற உரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு பெண்கள் என, திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இங்கு பயிற்சி முடித்த சப் இன்ஸ்பெக்டர்கள் காஷ்மீர், சட்டிஸ்கர், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றுவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
விழாவையொட்டி, சிறப்பு யோகாசனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பயிற்சி முடித்த சப்-இன்ஸ்பெக்டர்கள், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நக்சல்களை ஒடுக்கவும், காஷ்மீரில் தீவிரவாதத்தை தடுக்கவும், அங்குள்ள இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் செயல்படவும், சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.