/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாயை ஏவி 5 வயது சிறுமியை கடிக்க வைத்த கொடூர பெண் கைது
/
நாயை ஏவி 5 வயது சிறுமியை கடிக்க வைத்த கொடூர பெண் கைது
நாயை ஏவி 5 வயது சிறுமியை கடிக்க வைத்த கொடூர பெண் கைது
நாயை ஏவி 5 வயது சிறுமியை கடிக்க வைத்த கொடூர பெண் கைது
ADDED : மே 07, 2025 01:26 AM

கோவை:கோவை மாவட்டம், புலியகுளம், அம்மன் குளம், புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பின், எல் பிளாக்கில் பொன்வேல், 33, குடும்பத்துட ன் வசிக்கிறார். இவருக்கு, 5 வயதில் மேகாலினி என்ற மகள், ஏழு மாத கைக்குழந்தை உள்ளனர்.
அதே குடியிருப்பில், கண்ணன் மனைவி சவுமியா, 50 தன் மகன்கள் சூர்யா, 23, சாந்தாராம் பிரகாஷ், 21, ஆகியோருடன் வசிக்கிறார். இவர் ஐந்து நாய்களை வளர்த்து வருகிறார்.
கடந்த, 2023ல், சவுமியாவின் நாய்கள் அப்பகுதியில் சிலரை கடித்துள்ளன. இதனால், 'நாய் வளர்க்கக் கூடாது' என, அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் கேட்பதாக இல்லை. கடந்த, 3ம் தேதி சிறுமி மேகாலினி, சவுமியா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமியை வேறு பக்கம் சென்று விளையாடும்படி, சவுமியா தெரிவித்தார்.
ஆனால், சிறுமி தொடர்ந்து அங்கேயே விளையாடியதால், தன் நாயை விட்டு சிறுமியை கடிக்க வைத்தார் சவுமியா.
சிறுமியின் அலறல் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொன்வேல், சவுமியா வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தார். அப்போது, சவுமியா, தன் மகன்களுடன் சேர்ந்து, பொன்வேலை தகாத வார்த்தைகளால் திட்டினார். பொன்வேல் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.
சவுமியா, சூர்யா, சாந்தாராம் பிரகாஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சவுமியாவை சிறையில் அடைத்தனர்.
சூர்யா, சாந்தாராம் பிரகாஷ் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர்.
சிறுமியை கடித்த நாய் குறித்து, புளூ கிராஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நாயை பிடித்து சென்று, கண்காணித்து வருகின்றனர்.