ADDED : மார் 29, 2026 04:00 AM
தேவையான பொருட்கள்: n வெண்ணெய் 100 கிராம் n பொடித்த சர்க்கரை 100 கிராம் n வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன் n கோதுமை மாவு ஒரு கப்
செய்முறை :
பிஸ்கட் செய்ய முதலில் வெண்ணெயுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து ஸ்பூனால் நன்கு கலந்து விட்டுக் கொள்ளவும். பிறகு வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன் சேர்த்து அதையும் நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது கோதுமை மாவை நன்கு சலித்து ஒரு கப் அளவில் எடுத்து வெண்ணெய் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். சப்பாத்தி மாவை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்வது நல்லது. இதனால் பிஸ்கட் நன்கு மொறுமொறுப்பாக ருசியாக கிடைக்கும். இப்பொழுது பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி ஒரு போர்க்கால் நடுவில் சிறிது அழுத்தி பிரஸ் பண்ண அழகான ஷேப்பில் ரெடியாகிவிடும். இதனை இட்லி தட்டில் வைத்து வேக விடவும். ஓவன் தேவையில்லை. இட்லி பாத்திரத்தில் ஒரு கப் கல் உப்பை அடியில் போட்டு உப்பு நன்கு சூடாகும் வரை அடுப்பை நன்கு எரிய விட்டு நன்கு சூடானதும் மிதமான தீயில் வைத்து மேலே இட்லி தட்டில் பிஸ்கட்களை பரப்பி மூடி விடவும். 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேகட்டும். இப்பொழுது திறந்து பார்க்க அருமையான பொன் கலரில், மணமான கோதுமை மாவு பிஸ்கட் தயார். இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். டீ டைமில் இதனை டீயுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். செய்வதும் எளிது. இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். கிரிஸ்பியாகவும் ருசியாகவும் இருக்கும்.
