/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : செப் 23, 2024 12:16 AM

கோவை : பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்து, தங்களது பழைய நினைவுகளையும், உறவுகளையும் புதுப்பித்துக்கொண்டனர்.
எந்த வயது என்றாலும், பள்ளியில் பயின்ற மாணவர்கள் சந்தித்துக் கொண்டால், அங்கு மகிழ்ச்சிக்கும், ஆரவாரத்துக்கும், குறைவிருக்காது.
கோவை தாமஸ்பார்க் பகுதியில், நேற்று அப்படி ஒரு மகிழ்ச்சி, ஆரவாரத்தை பார்க்க முடிந்தது. கோவை டவுன்ஹால், சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1980ம் ஆண்டு பயின்ற மாணவர்கள், சந்தித்துக் கொண்டதே அதற்கு காரணம்.
இதில் தாங்கள் பள்ளியில் பயின்ற போது, நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து தங்களை உயர்த்திய பள்ளியின் முன்னேற்றத்துக்கு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசித்தனர்.
அதன்படி, பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
இதில், முன்னாள் மாணவர் இளங்கோவன் வரவேற்றார். கண்காளிப்பாளர் ஜெயகுமார், கோவை மாநகராட்சி முன்னாள் துணை கமிஷனர் நுார் முகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.