/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய பளு துாக்கும் போட்டியில் சி.எஸ்.ஐ., மாணவிக்கு வெண்கலம்
/
தேசிய பளு துாக்கும் போட்டியில் சி.எஸ்.ஐ., மாணவிக்கு வெண்கலம்
தேசிய பளு துாக்கும் போட்டியில் சி.எஸ்.ஐ., மாணவிக்கு வெண்கலம்
தேசிய பளு துாக்கும் போட்டியில் சி.எஸ்.ஐ., மாணவிக்கு வெண்கலம்
ADDED : ஏப் 16, 2025 10:21 PM
கோவை; தேசிய அளவிலான பளு துாக்கும் போட்டியில், சி. எஸ்.ஐ., பெண்கள் பள்ளி மாணவி வெண்கலம் வென்று, பெருமை சேர்த்துள்ளார்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி. எப்.ஐ.,) சார்பில், தேசிய அளவிலான பளு துாக்கும் போட்டி கடந்த, 7 முதல், 13ம் தேதி வரை மணிப்பூரில் நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அவிநாசி ரோடு, சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 பயிலும் மாணவி சந்தியா, வெண்கல பதக்கம் வென்றுள்ளார். மாணவியை பள்ளி தாளாளர் ஜாஸ்மின், உதவி தலைமையாசிரியை வசந்தகுமாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் அனிதா, சுகிர்தா ஆகியோர் பாராட்டினர்.