சி.டி.சி.ஏ., 67வது ஆண்டு விழா விளையாட்டு வீரர்கள் கவுரவிப்பு
சி.டி.சி.ஏ., 67வது ஆண்டு விழா விளையாட்டு வீரர்கள் கவுரவிப்பு
ADDED : ஜன 28, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின்(சி.டி.சி.ஏ.) 67வது ஆண்டு விழா, ஆவாரம்பாளையம் எஸ்.என்.ஆர். ஆடிட்டோரியத்தில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஸ்ரீநிவாசராஜ், ''மாவட்ட கிரிக்கெட் சங்கங்கள் இளைஞர்களிடம் மறைந்துள்ள விளையாட்டு திறமைகளை போட்டிகள் வாயிலாக வெளிப்படுத்தி ஊக்குவிக்கின்றன. இதன் வாயிலாக மாநில, தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்,'' என்றார்.
சி.டி.சி.ஏ. சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சங்க தலைவர் லட்சுமிநாராயணசாமி, செயலாளர் சந்திர மவுலி உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.
