/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானாவாரி பயிராக வெள்ளரி சாகுபடி
/
மானாவாரி பயிராக வெள்ளரி சாகுபடி
ADDED : நவ 22, 2024 11:05 PM

கிணத்துக்கடவு,: கிணத்துக்கடவு, வரதனூர் பகுதியில் விவசாயிகள் வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பரவலாக, வெள்ளரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனனர். மற்ற காய்கறிகளை காட்டிலும், வெள்ளரிக்காய் சாகுபடி பரப்பு குறைவாகவே உள்ளது. தற்போது, கிணத்துக்கடவு வரதனூர் ஊராட்சியில் வெள்ளரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயி கூறுகையில், 'அரை ஏக்கர் நிலத்தில், மானாவாரியாக வெள்ளரிக்காய் விதைப்பு செய்துள்ளோம். விதைப்பு செய்து ஒரு மாதம் ஆகிறது. தற்போது வரை இதற்கு வேலையாட்கள் கூலி, உரம் மற்றும் இதர செலவினம் என, 5 முதல் 8 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டுள்ளது.
இன்னும், 20 நாட்களில் வெள்ளரிக்காய் பறிப்பு துவங்கிவிடும். தற்போது மழைப்பொழிவு போதிய அளவு இருப்பதால், 1,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது, மார்க்கெட்டில் வெள்ளரிக்காய் கிலோவுக்கு, 12 - 15 ரூபாய் விலை கிடைக்கிறது. அறுவடை காலத்தில், மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப விலை கிடைக்கும்,' என்றார்.