/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயல்புக்கு வந்தது சீரக சம்பா விலை: பொங்கல் முடிந்த பின் புது வரத்து
/
இயல்புக்கு வந்தது சீரக சம்பா விலை: பொங்கல் முடிந்த பின் புது வரத்து
இயல்புக்கு வந்தது சீரக சம்பா விலை: பொங்கல் முடிந்த பின் புது வரத்து
இயல்புக்கு வந்தது சீரக சம்பா விலை: பொங்கல் முடிந்த பின் புது வரத்து
ADDED : டிச 10, 2025 09:39 AM

கோவை: சீரக சம்பா விலை, கடந்த சில மாதங்களாக உச்சத்தை தொட்டிருந்த நிலையில், தற்போது இயல்பு விலைக்கு திரும்பியுள்ளதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை சந்தைக்கு அரிசி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும்.
மேற்கு வங்கத்தில் அதிக மழை பொழிவு காரணமாக, கடந்த ஆக., முதல் சீரகசம்பா அரிசி விலை உயர்ந்து, 220 ரூபாய் வரை விற்பனையானது. புதிய பயிர் வரத்துக்கள் பிப்., மாதம் முதல் துவங்கும் என்பதால், பழைய இருப்புகள் அனைத்தும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், கோவை சந்தையில சீரக சம்பா அரிசி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், விலை 120 ரூபாய் வரை விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணக்குமார் கூறுகையில், '' புதிய பயிர் வரத்துக்கள் பொங்கல் முடிந்து, ஜன., இறுதி-பிப்., முதல் வாரத்தில் துவங்கிவிடும். அரிசியின் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திராவில் இருந்தும் பெரிய அளவில் வரத்து உள்ளதால், விலை உயர்வு இல்லை. சீரக சம்பா விலை குறைந்து நேற்று, 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இட்லி அரிசி 41 ரூபாய்க்கும், சப்பாட்டு அரிசி 47 முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது, '' என்றார்.

