sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொல்லியல் சார் பாடத்திட்டம் அவசியம்: ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் பேச்சு

/

தொல்லியல் சார் பாடத்திட்டம் அவசியம்: ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் பேச்சு

தொல்லியல் சார் பாடத்திட்டம் அவசியம்: ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் பேச்சு

தொல்லியல் சார் பாடத்திட்டம் அவசியம்: ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் பேச்சு


ADDED : ஜன 29, 2024 11:04 PM

Google News

ADDED : ஜன 29, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர்-

''வரலாறுகள், தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்படவேண்டும். தொல்லியல் சார்ந்த வரலாற்று பாடத்திட்டங்கள் நமது நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்'' என, தொல்லியல் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசினார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், 20வது புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில், 'கீழடி சொல்லும் தமிழரின் தொன்மை' தலைப்பில், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ஆலய ஆய்வுத்திட்டம்) கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசியதாவது:

தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வுகள் நடந்துள்ளன. கீழடி அகழாய்வு குறித்த தகவல்கள், உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது. வரலாற்றில் மிகவும் முக்கியமானது, அகழாய்வு.

இலக்கியம், கல்வெட்டுக்கள், நாணயங்கள், செவி வழி செய்திகளின் அடிப்படையில்தான் பெரும்பாலும் இந்திய வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன.

இந்தியர்களாகிய நமக்கு புராணங்கள் நன்கு எழுதத்தெரிந்திருந்தது; ஆனால், ஒரு வரலாற்றை எப்படி எழுத வேண்டும் என தெரிந்திருக்கவில்லை.

பழமையான நாகரிகம்


ஆதாரப்பூர்வமாக வரலாற்றை எப்படி எழுதவேண்டும் என, நமக்கு முதல் முதலில் கற்றுக்கொடுத்தவர், வில்லியம் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேயர்தான். உலகிலேயே மிகவும் பழமையானது, இந்திய தொல்லியல் துறை.

கடந்த 1861ல், ஆங்கிலேயர்கள்தான் இந்திய தொல்லியல் துறையை நிறுவினர். அதன்பின்னர்தான், பல பழமையான நினைவுச்சின்னங்கள் நமக்கு கிடைக்கத்துவங்கின.

1924ல் சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்தார். அதுவரை, பழமையான நாகரிகத்தை சுமந்து கொண்டிருப்பது நமக்கு தெரியவில்லை.

இந்தியாவில், இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்; குறிப்பாக, அது தென் பகுதியான தமிழகம்தான் என்பது, அகழாய்வுகள் வாயிலாக, வெளியுலக்கு தெரியவந்துள்ளது.

முதல் நிலை தரவுகள்


தொல்லியல் அடிப்படையிலான பாடத்திட்டம், இந்தியாவில் இன்னும் உருவாக்கப்படவில்லை; எதிர்காலத்தில் அத்தகைய வரலாற்று பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

வரலாறு என்பது ஆதாரங்களில் அடிப்படையில் எழுதப்படவேண்டும். தொல்லியலில் கிடைக்கும் பொருட்களெல்லாம், பழமையான வரலாற்றை கூறும் முதல் நிலை தரவுகள்.

நம் முன்னோர் அறிந்தும், அறியாமலும் விட்டுச்சென்ற பொருட்களின் அடிப்படையில்தான், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்றை கட்டமைக்கின்றனர். தொல்லியல் எச்சங்கள் பாதுகாக்கப்படவேண்டும். அதைவைத்து நமது வரலாற்றை பாதுகாக்க முடியும்.

கீழடி என்பது திடீரென கண்டறியப்பட்ட இடம் அல்ல. முறையாக கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வு இடம். வைகை நதிக்கரையில், 293 இடங்களில் பல்வேறுவகையான தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டன.

அதில், கீழடியில் மட்டும் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

தர்மபுரி மயிலாடும்பாறையில் சமீபத்தில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களை கார்பன் கணிப்பு செய்தபோது, 2,172 ஆண்டுகளுக்கு முன்னரே, இரும்பு எக்கு கண்டுபிடித்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இரும்பை கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தென்னிந்தியா முழுவதும் ஆற்றங்கரை நாகரிகங்கள் உள்ளன. முழுமையான ஆய்வு மேற்கொண்டு, தொல்லியல் எச்சங்களை ஆய்வு செய்து, நமது வரலாற்றை மீட்டெடுக்கவேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us