ADDED : செப் 19, 2025 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; கோவை சிறுமுகை, காரமடை, மத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் செங்காம்பு கறிவேப்பிலை 3,500 ஏக்கரில் பயிர் செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ கறிவேப்பிலை, 17 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த மாதம் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கு அறுவடை செய்யப்பட்டது. இந்த வாரம் ஒரு கிலோ, 15 ரூபாய்க்கு அறுவடை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும், 50 டன் கறிவேப்பிலை, கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தது.
தற்போது ஆத்தூர் கறிவேப்பிலை நேரடியாக தமிழகம் முழுவதும், கேரளாவிற்கும் அனுப்புவதால், காரமடை கறிவேப்பிலையின் தேவை குறைந்துள்ளது.
தற்போது தினமும் 25 டன் கறிவேப்பிலை அனுப்பப்படுகிறது.
பனிக்காலம் துவங்கும் பொழுது விலை உயர வாய்ப்பு உள்ளது.