/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அஞ்சலகத்தில் 'நெட் ஒர்க்' பிரச்னை வாடிக்கையாளர்கள் பரிதவிப்பு
/
அஞ்சலகத்தில் 'நெட் ஒர்க்' பிரச்னை வாடிக்கையாளர்கள் பரிதவிப்பு
அஞ்சலகத்தில் 'நெட் ஒர்க்' பிரச்னை வாடிக்கையாளர்கள் பரிதவிப்பு
அஞ்சலகத்தில் 'நெட் ஒர்க்' பிரச்னை வாடிக்கையாளர்கள் பரிதவிப்பு
ADDED : ஆக 22, 2025 11:48 PM
வால்பாறை: வால்பாறையில், அஞ்சலகங்களில் ஏற்பட்டுள்ள 'நெட் ஒர்க்' பிரச்னையால், வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாயினர்.
வால்பாறையில், ஆறு துணை அஞ்சலகங்கள், 22 கிளை அஞ்சலகங்கள் உட்பட, மொத்தம் 28 அஞ்சலகங்கள் உள்ளன. இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள சோலையாறுநகர், கருமலை, சின்கோனா உள்ளிட்ட பகுதிகளில், 'நெட் ஒர்க்' பிரச்னையால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், செலுத்தவும் முடியாமல் தவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: அஞ்சலகங்களில் பி.எஸ்.என்.எல்., 'நெட் ஒர்க்' பிரச்னையால், வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அவசரத்தேவைக்கு பணம் எடுக்க முடியாமலும், இன்சுரன்ஸ், செல்வமகள் சேமிப்பு திட்டம், டெபாசிட் உள்ளிட்ட கணக்குகளில் பணம் செலுத்த முடியாமல் திரும்பி செல்லும் நிலை உள்ளது.
குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் செயல்படும் அஞ்சலகங்களில் கடந்த சில மாதங்களாக நிலவும் 'நெட் ஒர்க்' பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
தபால் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் பரவலாகவே 'நெட் ஒர்க்' பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. மழை காலங்களில் இந்த பிரச்னை அதிகமாகவே உள்ளது. அய்யர்பாடி, சின்கோனா, சோலையாறுடேம், கருமலை உள்ளிட்ட சில அஞ்சலகங்களில் 'நெட் ஒர்க்' பிரச்னையால் பணிகள் பாதித்துள்ளது.
பி.எஸ்.என்.எல்., 'நெட் ஒர்க்' பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான புதிய 'சாப்ட்வேர்' தற்போது நடைமுறைப்படுத்துள்ள நிலையில், 'நெட் ஒர்க்' பிரச்னையால் புதிய சாப்ட்வேரை கையாள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.