/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அம்மணீஸ்வரர் கோவிலில் மரம் வெட்டியது அறங்காவலர் குழு தலைவரின் தன்னிச்சையான முடிவு செயல் அலுவலர் தகவல்
/
அம்மணீஸ்வரர் கோவிலில் மரம் வெட்டியது அறங்காவலர் குழு தலைவரின் தன்னிச்சையான முடிவு செயல் அலுவலர் தகவல்
அம்மணீஸ்வரர் கோவிலில் மரம் வெட்டியது அறங்காவலர் குழு தலைவரின் தன்னிச்சையான முடிவு செயல் அலுவலர் தகவல்
அம்மணீஸ்வரர் கோவிலில் மரம் வெட்டியது அறங்காவலர் குழு தலைவரின் தன்னிச்சையான முடிவு செயல் அலுவலர் தகவல்
ADDED : ஜன 24, 2025 10:04 PM
பொள்ளாச்சி,  ;''அம்மணீஸ்வரர் கோவிலில், தன்னிச்சையான கோவில் அறங்காவலர் குழு தலைவர் மரத்தை வெட்டியுள்ளார்,'' என, கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி அம்மணீஸ்வரர் கோவிலில், பழமையான மரத்தை வருவாய்துறை அனுமதியின்றி அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் வெட்டியதாக, சப் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள், மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மனு கொடுத்தனர்.
இது குறித்து, அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபனிடம் கேட்ட போது, 'செயல் அலுவலர் தாசில்தாரிடம் வந்த கடிதத்தை எனக்கு அனுப்பினார். அதன்பேரில் தான் மரம் வெட்டப்பட்டது,'' என, தெரிவித்து இருந்தார்.
கலந்தாலோசிக்காமல், மரத்தை தனிச்சையாக வெட்டியதாக கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.
செயல் அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:
அம்மணீஸ்வரர் கோவிலில், புதிதாக கால பைரவர் சன்னதி திருப்பணி, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெறப்பட்டு நடைபெற்று வருகின்றன. பைரவர் சன்னதிக்கு அருகில் உள்ள வேப்ப மரம் இடையூறாக உள்ளதாலும், சன்னதி பாதுகாப்பு கருதி மரத்தை அகற்ற வேண்டி அறங்காவலர் குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டு, செயல் அலுவலர் கடிதத்துடன் சப் - கலெக்டருக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
மரம் வெட்டுவதற்காக பொள்ளாச்சி தாசில்தார் பரிந்துரை கடிதம், சப் - கலெக்டருக்கு அனுப்பினார். இந்த கடிதத்தின் நகல், டி.கோட்டாம்பட்டி அம்மணீஸ்வரர் கோவில் முகவரிக்கு வந்தது.
அந்த கடிதத்தை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் பெற்றுக்கொண்டு, மரம் வெட்டுவது தொடர்பாக எவ்வித அறிவிப்புமின்றி தன்னிச்சையாக வெட்டியுள்ளார். அதன்பின், தாசில்தார் பரிந்துரை கடிதத்தை கொண்டு வந்து கொடுத்தார்.
மரம் வெட்டுவது தொடர்பாக,கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக மரம் வெட்டி விட்டு, 'தாசில்தாரிடம் இருந்து வந்த கடிதத்தை செயல் அலுவலர் எனக்கு அனுப்பினார். அதன் பின் மரம் வெட்டப்பட்டது,' என தவறான தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து சப் -கலெக்டர், தாசில்தாரிடம் விளக்கம் அளிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

