/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெட்டிவேர் சாகுபடி கருத்தரங்கு
/
வெட்டிவேர் சாகுபடி கருத்தரங்கு
ADDED : பிப் 12, 2025 12:12 AM
கோவை; மாடித்தோட்டத்தில் வெட்டி வேர் சாகுபடி செய்வது தொடர்பான கருத்தரங்கு, வேளாண் பல்கலையில் நடந்தது.
பல்கலையின் உயிரி தொழில்நுட்ப மையத்தில் நடந்த வேளாண் தொழில்நுட்ப தொழில்முனைவோர் சந்திப்பில், வெட்டிவேர் சாகுபடி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
வெட்டிவேர் சாகுபடி பயிற்சி, வளர்க்கப் பயன்படுத்தப்படும் குழாய்களின்வகை, ஏற்றுமதி, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், சாகுபடி சிரமங்கள், வேர் எடையைக் கண்காணித்தல், விற்பனை செய்யும் முறை, உரம், ஏழு மாத முதிர்வு காலத்துக்கு முன் வருவாய் ஈட்டுவதற்கான சாத்தியக் கூறுகள், காத்திருப்புக் காலத்தில் வருமானம் ஈட்ட பிற பயிர்களை சாகுபடி செய்தல் உள்ளிட்டவை குறித்து, கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய இயக்குநர் செந்தில், தாவர தொழில்நுட்பவியல் துறை தலைவர் கோகிலா தேவி, பேராசிரியர் மோகன்குமார், மைய மேலாளர் ராதிகா மலர், எகோ கிரீன் யூனிட் திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

