/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப் பன்றிகளால் வாழைகள் சேதம்: வருவாய்த்துறை ஆய்வு
/
காட்டுப் பன்றிகளால் வாழைகள் சேதம்: வருவாய்த்துறை ஆய்வு
காட்டுப் பன்றிகளால் வாழைகள் சேதம்: வருவாய்த்துறை ஆய்வு
காட்டுப் பன்றிகளால் வாழைகள் சேதம்: வருவாய்த்துறை ஆய்வு
ADDED : ஜன 02, 2024 11:01 PM
அன்னுார்;தாசபாளையத்தில் இரண்டு தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் வாழை மரங்களை சேதப்படுத்தின.
அன்னுார் வட்டாரத்தில், காட்டுப்பன்றிகள் அதிகரித்து விட்டன. நுாற்றுக் கணக்கான பன்றிகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு தாசபாளையத்தில் இறங்காட்டு தோட்டம், ரவீந்திரன் தோட்டம் ஆகிய இரு தோட்டங்களில் 80 வாழை மரங்களை மண்ணைத் தோண்டி சாய்த்துள்ளன. அடிபகுதியில் உள்ள கிழங்குகளை தின்று சேதப்படுத்திவிட்டன.
இதை பார்த்த விவசாயிகள் கஞ்சப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அன்னுார் தோட்ட கலைத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்த்துறையினர் தோட்டத்தில் சேதம் அடைந்த வாழைகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''மூன்று ஆண்டுகளாக காட்டு பன்றிகள் வாழை மரங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையிடம் தெரிவித்தால் வருவாய் துறைக்கு கூறும்படி சொல்கின்றனர். வருவாய்த்துறையினர், தோட்டக்கலைத் துறைக்கு தெரிவிக்கும்படி கூறுகின்றனர்.
மூன்று ஆண்டுகளில் ஒரு முறை கூட ஒரு வாழைக்கு கூட அன்னுார் வடக்கு பகுதியில் இழப்பீடு வழங்கப்படவில்லை. காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக்கு விரட்டவும் நடவடிக்கை எடுப்பதில்லை.
வனத்துறை, வருவாய்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.