/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னாற்றின் பாலத்தில் சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
/
சின்னாற்றின் பாலத்தில் சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 30, 2025 12:26 AM

தொண்டாமுத்தூர்; சாடிவயல், சின்னாற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் சேதமேற்பட்டுள்ளதால், அவ்வழியாகசெல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், சாடிவயலில், கோவை குற்றாலம் வனத்துறையினரின் சோதனை சாவடிக்கு செல்லும் முன்பு சின்னாறு உள்ளது. இந்த சின்னாற்றின் மீது மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மேற்புறத்தில், பெரிய குழி ஏற்பட்டுள்ளது. பாலம் சேதமடைந்திருப்பது தெரியாமல் செல்லும்போது, அந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. வாகனங்களும் குழியில் சிக்கி விபத்துக்குள்ளாகும் ஆபத்தும் உள்ளது.
இப்பகுதியில், தற்போது தொடர் மழை பெய்து வருவதாலும், சின்னாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதாலும், பாலம் மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறையினர், விரைந்து, பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைக்க வேண்டும்.