/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாசன கால்வாய் தடுப்புகள் சேதம்
/
பாசன கால்வாய் தடுப்புகள் சேதம்
ADDED : பிப் 23, 2026 05:46 AM

நெகமம்: நெகமம், வகுத்தம்பாளையம் -- தேவணாம்பாளையம் செல்லும் ரோட்டில் பாசன கால்வாய் தடுப்புகள் சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
நெகமம் அருகே, வகுத்தம்பாளையத்தில் இருந்து தேவணாம்பாளையம் செல்லும் ரோட்டில் பி.ஏ.பி. பாசன கால்வாய் தரைப்பாலம் உள்ளது. இந்த ரோடு வழியாக தினமும் பலர் வந்து செல்கின்றனர்.
தற்போது, இந்த பி.ஏ.பி., கால்வாய் தரைப்பால தடுப்பு ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது. இதனால், இப்பகுதியை நான்கு சக்கர வாகனங்கள் மெதுவாக கடந்து செல்கிறது. இரவு நேரத்தில் ஆட்கள் நடந்து சென்றாலோ அல்லது பைக்கில் சென்றாலோ தவறி விழ அதிக வாய்ப்புள்ளது. எனவே, சேதமடைந்த பி.ஏ.பி. கால்வாய் தடுப்பை சரி செய்ய வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

