ADDED : மார் 09, 2026 06:29 AM
அ நிறம் | அளவு
போத்தனுார்: கோவை, குனியமுத்துார் அடுத்த சுகுணாபுரம், செந்தமிழ் நகர் பகுதியிலுள்ள கருப்பராயன், சமயபுரம் மாரியம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. நேற்று மாலை கோவில் பூசாரி கணேசன், விளக்கு ஏற்ற சென்றார்.
விநாயகர், மாரியம்மன் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் இரு வேல்கள் வளைக்கப்பட்டிருந்தன. மின் இணைப்புகளும் சேதமாகியிருந்தன. குனியமுத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
