sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேம்பாலம் சேதம்

/

மேம்பாலம் சேதம்

மேம்பாலம் சேதம்

மேம்பாலம் சேதம்


ADDED : செப் 23, 2024 11:16 PM

Google News

ADDED : செப் 23, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருளில் அம்பேத்கர் தெரு


கோவை வார்டு எண், 2 வெள்ளக்கிணர் அம்பேத்கார் தெருவில், மூன்று தெருவிளக்குகள் நீண்ட நாட்களாக எரிவது இல்லை. இதனால், இரவு நேரங்களில் வெளியில் செல்வது சிரமமாக உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமாரவேல், வெள்ளக்கிணர்.

நடக்கவே வழியில்லை


கோவை, ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் அருகில், லங்கா கார்னர் ரோடு சாலை முழுவதும் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துதல், குப்பை ஒரு புறம் என சாலை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களால் நடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது.

-நடராஜன்,சாய்பாபா காலனி.

மேம்பாலம் சேதம்


வெள்ளலுார்- சிங்கநல்லுார் மேம்பாலம் சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும்.

-கண்ணன், சிங்காநல்லுார்.

சாக்கடையால் அவதி


திருச்சி சாலையில், அரசு மருத்துவமனை அருகே வி.சி.கே., லே அவுட் பகுதிகளில் சாக்கடை நீர் ஓடுவதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி முழுமையும், சாக்கடை, குப்பை நிறைந்துள்ளளது.

-ராஜ்குமார், வி.சி.கே லே-அவுட்.

விபத்து அபாயம்


கோவை 98வது வார்டு சிலோன் காலனி அருகில், எம்.ஜி.ஆர்.நகர் இரண்டாம் வீதியில், சாலை முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதில் ஏற்பட்ட பள்ளத்தில், குழந்தைகள் விழும் அபாயம் உள்ளது. வாகனங்கள் செல்லவும் இடையூறாக உள்ளது.

- முத்துக்குமார், சிலோன் காலனி.

சுத்தம் என்ன விலை!


கோவை கிழக்கு மண்டலம் ஒண்டிபுதுார், கம்மவார் வீதியில் பல மாதங்களாக சாக்கடை சுத்தம் செய்வதேயில்லை. புழுக்கள் பெருகி துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாக்கடையை விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்.

-சரோஜினி, ஒண்டிப்புதுார்.

பராமரிப்பு தாமதம்


புலியகுளம், அலமேலு மங்கம்மாள் லே-அவுட் வீதி எண் 1ல் உள்ள, போர் மோட்டாரை பராமரிப்பு பணிக்காக எடுத்து, ஏழு, எட்டு மாதங்கள் ஆகியும் இதுவரை சரிசெய்து பொருத்தாமல் உள்ளனர். இதனை உடனடியாக சரிசெய்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.

- வெங்கட சுப்ரமணியன், புலியகுளம்.

எரியுமா தெருவிளக்கு?


சரவணம்பட்டி, 10வது வார்டு ஜெயா நகர் பகுதியில், தண்ணீர் தொட்டிக்கு பின் இருக்கும் தெரு விளக்கு எரிவதில்லை. ரோடு மிகவும் மோசமான சூழலில் இருக்கிறது. மாலை, 7:00 மணிக்கே அதிக இருள் இருப்பதால், சாலையை பயன்படுத்த இயலவில்லை.

- மகாலட்சுமி, சரவணம்பட்டி.

இழுபறியாகும் பணி


கோவை வார்டு எண், 22 சேரன் மாநகர் 5வது பஸ் ஸ்டாப் அருகில், தண்ணீர் பைப் பராமரிப்பு பணி துவங்கி, முடிக்காமல் விட்டுள்ளனர். இரண்டு மாதங்களாகிறது.

- லதா, சேரன் மாநகர்.






      Dinamalar
      Follow us