/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாக்கடை பணியால் சுற்றுச்சுவர் சேதம்
/
சாக்கடை பணியால் சுற்றுச்சுவர் சேதம்
ADDED : டிச 31, 2024 07:49 AM

சூலுார் : சாக்கடை கட்டும் பணியால், சூலுார் பி.டி.ஓ., குடியிருப்பின் சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சூலுார் பேரூராட்சி பொன் விழா கலையரங்கம் அருகில், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. அப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாய் கட்டி வருகிறது. இதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் குழி எடுக்கும் போது, குடியிருப்பின் சுற்றுச்சுவரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தூண்கள் உள்ள இடத்தில் பலத்த சேதமடைந்துள்ளது. இதனால், பலவீனமடைந்துள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எதிரில் உள்ள கலையரங்கத்துக்கு காலை, மாலை நேரங்களில் ஏராளமான குழந்தைகள் விளையாட இவ்வழியே தான் வந்து செல்வர். அதனால், அசம்பாவிதம் நடக்கும் முன், சுற்றுச்சுவரை, பேரூராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும், என, அப்பகுதி மக்கள் கூறினர்.