/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த தடுப்புகள்: சீரமைப்பது எப்போது?
/
சேதமடைந்த தடுப்புகள்: சீரமைப்பது எப்போது?
ADDED : மார் 17, 2025 09:25 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் சேதமடைந்த தடுப்புகளை சரி செய்ய வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், ஒரு சில இடங்களில் விபத்து ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க, போலீசார் சார்பில் 'யூ டர்ன்' பகுதிகளில் டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் விபத்து நடக்கும் பகுதிகள் அருகே, எச்சரிக்கை பலகை மற்றும் ரோட்டில் மஞ்சள் நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது.
சர்வீஸ் ரோட்டோரம் மற்றும் முக்கிய கிராமப்புற பகுதியின் ஓரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வாகன விபத்துகள் ஏற்படுவது தொடர்கிறது.
இதில், பைக் முதல் கனரக வாகனங்கள் வரை பெரும்பாலும் ரோட்டோர தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. இதில், சேதமடையும் தடுப்புகளை மாதக்கணக்கில் சரி செய்யப்படாமல், அப்படியே விடப்பட்டுள்ளாதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
வாகன ஓட்டுநர்கள் தடுப்பு சேதம் அடைந்த பகுதியை கடக்கும் போது, அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், தடுப்புகள் சேதம் அடைந்த இடங்களை ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.