/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்திருந்த மின் கம்பம் மாற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
/
சேதமடைந்திருந்த மின் கம்பம் மாற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
சேதமடைந்திருந்த மின் கம்பம் மாற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
சேதமடைந்திருந்த மின் கம்பம் மாற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : ஜூலை 04, 2025 10:17 PM

வால்பாறை; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறையில், சேதமடைந்த மின் கம்பம் மாற்றப்பட்டது.
வால்பாறை காந்திசிலை அருகே மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பம், மேலிருந்து கீழ் வரை சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் இருந்தது.
வால்பாறையில் காற்றுடன் கனமழை பெய்யும் நிலையில், மின்கம்பம் முறிந்து விழ வாய்ப்புள்ளது. இதனால், அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சரிந்து விழும் நிலையில் இருந்த மின் கம்பத்தை மாற்றி, புதிய மின் கம்பம் அமைத்தனர். இதனால், மக்கள் நிம்மதியடைந்தனர்.