/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்திருந்த மின்கம்பங்கள் மாற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி
/
சேதமடைந்திருந்த மின்கம்பங்கள் மாற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி
சேதமடைந்திருந்த மின்கம்பங்கள் மாற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி
சேதமடைந்திருந்த மின்கம்பங்கள் மாற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : மே 06, 2025 11:33 PM

பொள்ளாச்சி: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் பழுதடைந்த மின்கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் மாற்றியமைத்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், மின் கோட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியின்போது, மின் கம்பிகள், மின் கம்பங்களின் உறுதித் தன்மை சரிபார்க்கப்படுகிறது.
இத்துடன், மின் கம்பிகள் செல்லும் பாதையில், இடையூறாக உள்ள மரம், செடி உள்ளிட்டவை அகற்றப்படுகின்றன. எனினும், சில பகுதிகளில், சிதிலமடைந்து ஆபத்தான நிலையில், மின் கம்பங்கள் காணப்படுகின்றன.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் இளங்கோவீதி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ரோடுகளில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள் காணப்பட்டன.கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பியுடன் இருந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருந்தது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள், சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி, புதிய கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டனர்.
அகற்றப்பட்ட மின்கம்பங்களை எடுத்து செல்லாமல், ரோட்டோரம் குப்பையோடு, குப்பையாக போட்டுச் சென்றனர். இதையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.