/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமான இணைப்பு பாலம்: வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
/
சேதமான இணைப்பு பாலம்: வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
ADDED : அக் 26, 2025 11:29 PM

வால்பாறை: வால்பாறையில் இணைப்பு பாலம் சேதமானதால் வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பாலத்தின் வழியாக, முடீஸ், சின்கோனா செல்லும் பாலம் உள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டில் உள்ள பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது.
மழை காலத்தில் பாலத்தின் இடையே ஏற்பட்டுள்ள விரிசலில் தண்ணீர் தேங்குகிறது. வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இரவு நேரங்களில் இந்த பாலம் மாட்டுத்தொழுவமாகவும், பகல் நேரத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறி வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக பாலம் சீரமைக்கப்படாமல் உள்ள நிலையில்,பாலத்தின் மேலும் கீழும் விரிசல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, நல்லகாத்துபாலம் வழியாக இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை செல்கின்றன. பாலத்தில் இரண்டு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தில் இரண்டு இடங்களில் விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாலத்தை புதுப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

