/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வு
/
கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வு
கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வு
கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வு
ADDED : அக் 26, 2025 11:30 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என கால்நடைத்துறை உதவி இயக்குனர் சக்ளாபாபு தெரிவித்தார்.
தமிழகத்தில், கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், வேட்டைக்காரன்புதுார், கிணத்துக் கடவு பகுதிகளுக்கு கால் நடைத்துறை ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதில், '1962' என்ற இலவச மொபைல்போன் எண்ணை அழைக்கலாம். இந்த சேவை வாயிலாக, கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை, விபத்து, நோய் பாதிப்பு, பிரசவ உதவி போன்ற மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
போனில், உங்கள் விபரங்கள் மற்றும் கால்நடையின் பிரச்னை குறித்துத் தெரிவிக்க வேண்டும். அருகிலுள்ள நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்து சிகிச்சை அளிக்கப்படும்.
இதற்காக ஒரு டாக்டர், உதவியாளர் ஒருவர் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கால்நடைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
கால்நடைத்துறை உதவி இயக்குனர் சக்ளாபாபு கூறியதாவது:
கால்நடை ஆம்புலன்ஸ் சேவையில், முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. தொலைதுார கிராமங்களுக்கு சென்று தேவையான முதலுதவி சிகிச்சை அளிப்பதுடன், முகாம்கள் நடத்தப்படுகிறது.
விபத்து, எலும்பு முறிவு சிகிச்சை, கால்நடை நோய்களுக்கான சிகிச்சை, கன்று ஈன்றுவதில் சிரமம், செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. '1962' என்ற எண்ணை அழைத்து, பொதுமக்கள் பயன்பெறலாம். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, கூறினார்.

