/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த ஆளிறங்கு குழி மூடி: மாற்றியமைத்ததால் மக்கள் நிம்மதி: 'தினமலர்' செய்தி எதிரொலி

ADDED : ஜன 04, 2024 12:01 AM

பொள்ளாச்சி : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், பொள்ளாச்சி கால்நடை மருத்துவமனை அருகே சேதமடைந்த பாதாள சாக்கடையின் ஆளிறங்கு குழியின் மூடி, மாற்றியமைக்கப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 170 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீரேற்று நிலையம், கழிவுநீர் உந்து நிலையங்கள், ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டும், இணைப்புகள் முழுமை பெறாமல் உள்ளது.
நகரின் பல இடங்களில், அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையின் ஆளிறங்கு குழியின் மூடிகள் உடைந்து, வாகன விபத்து ஏற்படுத்துகிறது. ஆள் இறங்கு குழிகளின் மூடிகளை சரியாக அமைக்காமல், தார் ரோடு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி கால்நடை மருத்துவமனை அருகே ஆளிறங்கு குழியின் மூடி சேதடைந்து காணப்பட்டது. அங்கு, வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு குறிப்பிடப்படாமல் இருந்த நிலையில், மக்களே அங்கு குப்பை மூட்டையை தடுப்பாக அமைத்திருந்தனர்.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து, சேதமடைந்திருந்த ஆளிறங்கு குழியின் மூடி அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக புதிய மூடி அமைக்கப்பட்டு, அங்கிருந்த குப்பை மூட்டையும் அகற்றப்பட்டது.
மக்கள் கூறுகையில், 'நகரில், சேதடைந்து காணப்படும் பாதாள சாக்கடையின் ஆளிறங்கு குழியின் மூடிகளை மாற்றி அமைக்க வேண்டும். ஆளிறங்கு குழிகளை, ரோடுகளுக்கு இணையாக சமன்படுத்த வேண்டும்,' என்றனர்.