/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதிய வித்யா பவனில் நாட்டிய விழா துவக்கம்
/
பாரதிய வித்யா பவனில் நாட்டிய விழா துவக்கம்
ADDED : நவ 01, 2025 05:37 AM

கோவை: கோவை பாரதிய வித்யா பவனில், 24வது நாட்டிய விழா நேற்று துவங்கியது.
விழாவை கோவை பாரதிய வித்யா பவன் மைய தலைவர் நாகசுப்ரமணியம் தலைமை வகித்து துவக்கி வைத்து பேசுகையில், ''நமது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்ப்பதில், பாரதிய வித்யா பவன், 1964ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. அதுபோல் ஆன்மிகத்தை வளர்ப்பதிலும். அதற்காக ஆண்டுதோறும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துகிறது,'' என்றார்.
கோவையை சேர்ந்தவரும், பெங்களூருவில் நாட்டிய பள்ளி நடத்தி வருபவருமான பத்மாவுக்கு, 'நிருதிய ரத்னா' விருது வழங்கப்பட்டது.
அஜீஷ் மேனனின் மோகினியாட்டம், பத்மலாயா நடன குழுவினரின் தஞ்சாவூர் குழு பரதநாட்டியம் மார்கம் ஆகியவை நடந்தன.
கோவை பாரதிய வித்யா பவன் செயலாளர் அழகிரிசாமி, இணை செயலாளர் சூர்ய நாராயணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

