ADDED : பிப் 06, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி தமிழசை சங்கம் சார்பில், ரஷ்ய கலைஞர்கள் நடன நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில், கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய நடன கலைகள் மற்றும் இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாக, ரஷ்யா நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
ரஷ்யாவை சேர்ந்த, 19 நடன கலைஞர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கைத்தறி நெசவு செய்யும் முறை, நெல் நடவு செய்யும் முறை உள்ளிட்ட பாரம்பரிய தொழில் முறைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அந்த நாட்டு கலாசாரம், இலக்கியங்களை இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, நடனங்களை ஆடி கலைஞர்கள் அசத்தினர். தமிழிசை சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.