/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வரும் 15ம் தேதி 'டான்செட்' தரவரிசைப்பட்டியல் வெளியீடு'
/
'வரும் 15ம் தேதி 'டான்செட்' தரவரிசைப்பட்டியல் வெளியீடு'
'வரும் 15ம் தேதி 'டான்செட்' தரவரிசைப்பட்டியல் வெளியீடு'
'வரும் 15ம் தேதி 'டான்செட்' தரவரிசைப்பட்டியல் வெளியீடு'
ADDED : ஜூலை 03, 2025 12:31 AM
கோவை:
எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல், வரும், 15ம் தேதி வெளியாகும் என, அரசு தொழில்நுட்பக்கல்லுாரி முதல்வர் மனோன்மணி கூறினார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்), தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
இந்த தேர்வை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. விண்ணப்பித்தவர்களுக்கு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடந்து வருகிறது.
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் மனோன்மணி கூறுகையில், ''வரும், 15ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிட, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவரிசையில் குறைகள் இருந்தால் அதுகுறித்து தெரிவிக்க, அவகாசம் வழங்கப்படும். அதன் பின், இம்மாதி இறுதியில் கவுன்சிலிங் துவங்கும்,'' என்றார்.