தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'டான்டீ' தொழிலாளர்கள் 11ல் போராட்டம் அறிவிப்பு

'டான்டீ' தொழிலாளர்கள் 11ல் போராட்டம் அறிவிப்பு

'டான்டீ' தொழிலாளர்கள் 11ல் போராட்டம் அறிவிப்பு


ADDED : ஆக 08, 2025 08:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 08:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை; ஆனைமலை அம்பேத்கர் தோட்ட மக்கள் சங்க தலைவர் வீரமணி, பொதுச்செயலாளர் கேசவமருகன் ஆகியோர், 'டான்டீ' தேயிலை தோட்ட கூடுதல் தலைமை செயலாளருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறை, சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 2021ம் ஆண்டு முதல், 2025 வரை மருத்துவ விடுப்பு நிலுவை தொகை வழங்கப்படவில்லை.

'டான்டீ' தேயிலை தோட்டம் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் போதிய அடிப்படை வசதி இல்லாமலும், வனவிலங்குகள் தொல்லையாலும் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

'டான்டீ' லாசன் கோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் செல்வதால் அவர்களுக்கு, ஓய்வூதிய தொகையாக, 10 லட்சம் ரூபாய் முதல், 15 லட்சம் ரூபாய் வரை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 11ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us