/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் தண்டவாளப்பகுதியில் கால்நடைகளால் ஆபத்து
/
ரயில் தண்டவாளப்பகுதியில் கால்நடைகளால் ஆபத்து
ADDED : ஜூன் 17, 2025 09:14 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ரயில் தண்டவாளம் அருகே, கால்நடைகள் உலா வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி - கோவை ரயில் வழித்தடத்தில், கோவைக்கு காலை மற்றும் மாலை நேரத்திலும், மதுரை - கோவை ரயில் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது.
பாலக்காடு - திண்டுக்கல் ரயில் பாதையில், திருச்செந்துார் ரயில், திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ரயில் தண்டவாளத்தில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சியில், ரயில் தண்டவாளம் அருகே ரயில் விபத்துகளை தவிர்க்கவும், கால்நடைகள் உயிர் இழப்பை தவிர்க்க மேய்ச்சலுக்கு விடக்கூடாது, என, ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், விதிமுறை மீறி கால்நடைகள், ரயில் தண்டவாளப்பகுதியில் விடப்படுகின்றன. இதனால், ரயில்கள் மோதி கால்நடைகள் இறக்கும் அபாயம் உள்ளது.
இதுபோன்று, சிலர் விதிமுறை மீறி தண்டவாளப்பகுதியில் நடந்து செல்வது, 'செல்பி' எடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
விதிமுறை மீறல்களை கட்டுப்படுத்த ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.