/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குவி கண்ணாடி முன் அமைத்த அறிவிப்பு பலகையால் அபாயம்
/
குவி கண்ணாடி முன் அமைத்த அறிவிப்பு பலகையால் அபாயம்
குவி கண்ணாடி முன் அமைத்த அறிவிப்பு பலகையால் அபாயம்
குவி கண்ணாடி முன் அமைத்த அறிவிப்பு பலகையால் அபாயம்
ADDED : மே 02, 2025 08:50 PM

வால்பாறை; வால்பாறை செல்லும் மலைப்பாதையில், கொண்டைஊசி வளைவுகளில் அமைக்கப்பட்ட குவி கண்ணாடியை மறைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை மலைப்பாதையில், 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், குவி கண்ணாடிகள் பொருத்தபட்டுள்ளன. வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் அறியும் வகையில் அமைக்கபட்டுள்ள குவி கண்ணாடியால் கடந்த சில ஆண்டுகளாக விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளன.
இந்நிலையில், குவி கண்ணாடியை மறைத்து சில கொண்டைஊசி வளைவுகளில் நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனால், வளைவுகளில் வாகனங்கள் திரும்பும் போது, கண்ணாடி பார்வைக்கு தெரியாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். மலைப்பாதையில் விபத்துக்களை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் வைத்துள்ள குவி கண்ணாடிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
ஆனால், சில கொண்டைஊசி வளைவுகளில் குவி கண்ணாடி தெரிவதில்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்ணாடியை மாற்றியமைப்பதுடன், சில கொண்டைஊசி வளைவுகளில் சேதமடைந்த கண்ணாடிகளை சரி செய்ய வேண்டும். இவ்வாறு, கூறினர்.