ADDED : ஆக 31, 2025 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : 'டேனி ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்' சமூகப் பொறுப்பு பிரிவான, 'சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட்' வாயிலாக ரூ.20 லட்சத்தை, நேரு ஸ்டேடியம் கட்டமைப்புக்காக, கலெக்டர் பவன் குமாரிடம், டேனி ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிவராமன் வழங்கினார்.
சிவராமன் கூறுகையில், ''நாங்கள் அளிக்கும் நிதி, எதிர்கால விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு களை உருவாக்கும். டேனி ஷெல்டர்ஸ் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியமான திட்டங்களை முன்னெடுத்துள்ளது. கோவையின் மூன்று பகுதிகளில் 1.8 மில்லியன் சதுரடி கட்டட பரப்பளவைக் கொண்ட ஐ.டி., பூங்காக்கள் கட்டப்பட உள்ளன. இது, பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். கோவையின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்,'' என்றார்.