/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜே.சி.டி. கல்வி நிறுவனத்தில் ஓணம் பண்டிகை கோலாகலம்
/
ஜே.சி.டி. கல்வி நிறுவனத்தில் ஓணம் பண்டிகை கோலாகலம்
ஜே.சி.டி. கல்வி நிறுவனத்தில் ஓணம் பண்டிகை கோலாகலம்
ஜே.சி.டி. கல்வி நிறுவனத்தில் ஓணம் பண்டிகை கோலாகலம்
ADDED : ஆக 31, 2025 05:57 AM

கோவை : பிச்சனுார், ஸ்ரீ ஜெகன்நாத் கல்வி சுகாதாரம் மற்றும் தொண்டு அறக்கட்டளையின் கீழ் ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஜே.சி.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் ஜே.சி.டி., பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு ஓணம் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மாணவர்கள், பேராசிரியர்கள் கேரள பாரம்பரிய உடைகள் அணிந்து வந்திருந்தனர். கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள் வண்ண, வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டிருந்தனர்.
செண்டை மேளம், திருவாதிரை களி, காவடியாட்டம், கேரள பாரம்பரிய நடனம் போன்ற கலைநிகழ்வுகள் நடந்தன. கயிறு இழுத்தல், உறியடி போன்ற போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பிரமாண்டமாக நடந்த டி.ஜே., இசை கொண்டாட்டத்தில், மாணவர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். கல்லுாரி முதல்வர்கள் மனோகரன், அன்பரசு, தாமோதரன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

