/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவு மேலாண்மைக்கு டேனி ஷெல்டர்ஸ் உதவி
/
கழிவு மேலாண்மைக்கு டேனி ஷெல்டர்ஸ் உதவி
ADDED : அக் 07, 2025 11:19 PM

கோவை;டேனி ஷெல்டர்ஸ், தனது சி.எஸ்.ஆர். செயல்பாடான சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட் வாயிலாக, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு நிதியுதவி வழங்கியது. ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன், நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
டேனி ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சிவராமன் கந்தசாமி, ரூ.3.9 லட்சத்துக்கான காசோலையை, கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகேவிடம் வழங்கினார். இந்த நிதியுதவி, திடக்கழிவு மேலாண்மைக்கு மின் வாகனங்கள் வாங்க பயன்படுத்தப்பட உள்ளது.
சிவராமன் கந்தசாமி கூறுகையில், ''ஊராட்சிகளில் கழிவு மேலாண்மை முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும், வலிமையான சமூகங்களையும் கட்டமைக்க, நாங்கள் விரும்புகிறோம், '' என்றார்.
'மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும், திடக்கழிவு மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்த சி.எஸ்.ஆர். பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன' என, கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே கேட்டுக்கொண்டார்.