/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹட்கோ காலனி பூங்காவை புதுப்பித்தது பி.எஸ்.ஜி.
/
ஹட்கோ காலனி பூங்காவை புதுப்பித்தது பி.எஸ்.ஜி.
ADDED : அக் 07, 2025 11:18 PM

கோவை; பீளமேடு, ஹட்கோ காலனியில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை, கோவை எம்.பி. ராஜ்குமார் திறந்து வைத்தார். பி.எஸ்.ஜி. அண்டு சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்.ஆர். மற்றும் பி.எஸ்.ஜி. மருத்துவமனை பொது மேலாளர் ஜெகநாதன் தலைமை வகித்தனர்.
10 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இப்பூங்கா, கொரோனா தொற்று பரவலுக்கு பின் பராமரிக்கப்படாமல் இருந்தது. பி.எஸ்.ஜி. மருத்துவமனை நிர்வாகம் அதை மீட்டெடுக்க பணிகளை மேற்கொண்டது.
இப்போது பரந்த நடைபாதைகள், குழந்தைகள் விளையாடும் பகுதி, மரங்களுக்கு அடியில் இருக்கைகள், பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கான மேடை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகளுடன், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.