/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகள் -- மருமகன் தகராறு: விரக்தியில் தந்தை தற்கொலை
/
மகள் -- மருமகன் தகராறு: விரக்தியில் தந்தை தற்கொலை
ADDED : அக் 25, 2025 12:58 AM
மேட்டுப்பாளையம்: காரமடையை சேர்ந்தவர் பழனிச்சாமி, 67; விவசாயி. இவரது மகளுக்கு மேட்டுப்பாளையம் சுக்கு காப்பி கடையை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது.
கடந்த ஒன்றரை வருடங்களாக பழனிச்சாமியின் மகள், அவரது வீட்டில் தான் குடியிருந்து வருகிறார். பழனிச்சாமி நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே நேற்று முன்தினம் பழனிச்சாமி மகளுக்கும், அவரது மருமகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலில் இருந்த பழனிச்சாமி, திடீரென வீட்டு விட்டத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

