/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தயான் சந்த் நினைவு கோப்பை ஹாக்கி போட்டி துவக்கம்
/
தயான் சந்த் நினைவு கோப்பை ஹாக்கி போட்டி துவக்கம்
ADDED : பிப் 23, 2024 12:08 AM
கோவை;மாவட்ட அளவில் நடக்கும் தயான் சந்த் நினைவு கோப்பை ஹாக்கி போட்டி, பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரியில் நேற்று துவங்கியது.
பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், 16வது 'மேஜர் தயான் சந்த் நினைவு கோப்பைக்கான' மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி, பீளமேடு பி.எஸ்.ஜி., டெக் மைதானத்தில் பிப்., 22 முதல் 25 வரை நடக்கிறது. இதில், 9 அணிகள் பங்கேற்று லீக் முறையில் போட்டியிடுகின்றன.
முதல் நாளான நேற்று நடந்த முதல் லீக் போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் பார்க் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியையும், இரண்டாம் போட்டியில் பி.எஸ்.ஜி., டெக் அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியையும், மூன்றாம் போட்டியில் பி.பி.ஜி., கல்லுாரி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில், இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியையும் வீழ்த்தின.