/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முடங்கிய பேட்டரி வாகனங்கள் குப்பையாகும் அவலம்
/
முடங்கிய பேட்டரி வாகனங்கள் குப்பையாகும் அவலம்
ADDED : ஜூன் 12, 2025 10:11 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் குப்பைகள் எடுக்க பயன்படுத்தப்படும், 26 பேட்டரி வாகனங்கள் கடந்த, 15 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம், அசோகபுரம், பன்னிமடை, சின்னதடாகம், வீரபாண்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்க, பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
அவை கடந்த, 15 நாட்களாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்படும் பேட்டரி வாகனங்கள் பழுதாகும் வாய்ப்பு உள்ளதால், இதை உடனடியாக எடுத்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்தி கூறுகையில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நாள் ஒன்றுக்கு, 5 முதல், 10 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
அவற்றை பேட்டரி வாகனங்களில் எடுத்து திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கொண்டு வர, 26 பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. குருடம்பாளையம் ஊராட்சிக்கு மட்டும், 14 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
பேட்டரி வாகனங்களுக்கும் பதிவு மற்றும் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்பணி ஓரிரு நாளில் முடிக்கப்பட்டு, பேட்டரி வாகனங்கள் முழுமையாக ஊராட்சிகள் வசம் ஒப்படைக்கப்படும் என்றார்.