ADDED : ஜூன் 02, 2025 11:39 PM
அ நிறம் | அளவு
கோவை : ரேஷன் கார்டுதாரர்களுக்கு இகேஒய்சி பதிவு செய்ய, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் இகேஒய்சி (ekyc) எனும், பயனாளிகள் விபரங்களை ரேஷன் கடைகளில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவு முழுமையடையாததால், இம்மாதம் 30 தேதி வரை, கைரேகை பதிவு செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இதுவரை, 88 சதவீதம் ரேஷன் கார்டுதாரர்கள் இகேஒய்சி பதிவு செய்துள்ளனர். பதவு செய்யாதவர்களில் பலர் வெளியூர்களில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் தமிழகத்தில், எந்த மாவட்டத்தில் இருந்தாலும், அருகில் உள்ள ரேஷன்கடைகளுக்கு சென்று, வரும் 30ம் தேதி வரை, இகே ஒய்சி பதிவு செய்து கொள்ளலாம்' என்றார்.
