/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலர் கலரா கிரீம் கேக், சாக்லேட் சாப்பிட்டால் கேன்சர் வாய்ப்பு எச்சரிக்கிறார் அரசு மருத்துவமனை டீன்

ADDED : டிச 14, 2024 11:48 PM

கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சின்தடிக் ஸ்வீட்னர், ரசாயன நிறமிகள் சிறிது சிறிதாக குழந்தைகளின் உடலுக்குள் சேர்ந்து, பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
பிள்ளைகளின் விருப்பம் என, ரெயின்போ கேக், ரெட் வெல்வெட், பிஸ்தா, ஸ்iட்ராபெர்ரி என பல நிறங்களில் அதுவும், எடிபிள் பிரிண்ட் என்ற பெயரில் குழந்தைகள், கார்ட்டூன் புகைப்படங்கள் அச்சிட்டு கேக் வாங்கித்தருகின்றனர்.
குழந்தைகளுக்காக வாங்கும் அனைத்து ஸ்நாக்ஸ், சாக்லேட் உணவு பொருட்களில் காலாவதி தேதி மட்டுமின்றி, தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும், கட்டாயம் பார்த்து வாங்க வேண்டும்.
அதன் பட்டியலில் சுகர் விகிதம், செயற்கை நிறமிகள் இருப்பின், சின்தடிக் ஸ்வீட்னர், பாம் ஆயில், வெஜிடபிள் ஆயில் அதிகம் இருப்பின், கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.
அதிக வண்ணங்கள் எப்போதும் உடலுக்கு ஆபத்தானவை. தமிழகத்தில், அதிக ரசாயன நிறம் சேர்த்த பஞ்சு மிட்டாய் தடைசெய்யப்பட்டதை அறிவோம். அதை காட்டிலும் அதிக ஆபத்து கொண்ட, செயற்கை நிறமிகள் உள்ள பிஸ்கட், கேக், சாக்லேட் ஆகியவற்றை ஆசையாக வாங்கி அபாயத்திற்குள் பிள்ளைகளை தள்ளிவிடுகிறோம். இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள்.