/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அன்பான நண்பன் பகவான் கிருஷ்ணன்'
/
'அன்பான நண்பன் பகவான் கிருஷ்ணன்'
ADDED : மே 08, 2025 01:28 AM

கோவை : ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலம் மற்றும் பாரதிய வித்யா பவன் சார்பில், கோவையில் ஆன்மிக சொற்பொழிவு நேற்று நடந்தது.
பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடர் சுவாமி பரமார்த்தானந்தா, கிருஷ்ண பகவான் அருளிய பாகவத்தில் உள்ள உத்தவ கீதாவில் இருந்து பேசியதாவது:
இயற்கை அனைத்தும் என்னை முழுமையாக வணங்குகின்றன. ஒரே மாதிரியான பார்வை, பற்றின்மை போன்ற அனைத்து நித்திய நற்பண்புகளும், பண்புகளுக்கு அப்பாற்பட்டவனாகவும், முழுமையானவனாகவும், அன்பான நண்பனாகவும் நான் இருக்கிறேன்.
உங்கள் ஆன்மாவுக்குள் தங்கி இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். அவரது உடல் உண்மையிலேயே விதியின் கீழ் உள்ளது. அது தோற்றுவிக்கப்பட்ட வேலை முடியும் வரை பிரியாமல் ஒன்றாக இருக்கிறது என்றார்.
இவ்வாறு, பேசினார்.
நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

