ADDED : ஜன 03, 2025 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கடன் தொல்லையால் தேங்காய் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து, வடக்கிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே, கோவிந்தனுார் பாறை மேட்டை சேர்ந்தவர் முருகன், 50. இவர், தேங்காய் வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவர், வெளியில் பலருக்கு கொடுத்த பணமும் திரும்பி வரவில்லை. கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிலும் நஷ்டம் ஏற்பட்டதால், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
அவரை மீட்டு உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். வடக்கிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

